​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழகத்தின் கிழக்கு கடற்கரையில் ஜூன் 1ந் தேதி முதல் மீன் பிடிக்க அனுமதி

Published : May 26, 2020 11:30 AM

தமிழகத்தின் கிழக்கு கடற்கரையில் ஜூன் 1ந் தேதி முதல் மீன் பிடிக்க அனுமதி

May 26, 2020 11:30 AM

தமிழகத்தில் மீன்பிடி தடைகாலத்தை 61 நாட்களிலிருந்து 47 நாட்களாக குறைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட மாநில அரசுகளின் கோரிக்கையை ஏற்று, மத்திய மீன்வளத்துறை அமைச்சகம் மீன்பிடித்தடைக்காலத்தை குறைத்து நேற்று உத்தரவிட்டது.

இதனை தொடர்ந்து தமிழக அரசும் மீன்பிடி தடைக்காலத்தை குறைத்துள்ளது. அதன்படி வழக்கமாக கிழக்கு கடற்கரை பகுதியில் ஏப்ரல் 15 முதல் ஜுன் 14ம் தேதிவரை 61 நாட்களுக்கு அமல்படுத்தப்படும் தடைக்காலம், ஏப்ரல் 15 முதல் மே 31ம் தேதி வரை 47 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.

இதனால் கிழக்கு கடற்கரை பகுதியில் வரும் ஜூன் 1ம் தேதி முதல் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லலாம். அதே போல் வழக்கமாக மேற்கு கடற்கரை பகுதியில் ஜுன் 1 முதல் ஜுலை 31ம் தேதி வரை அமல்படுத்தபடும் தடைக்காலம், ஜூன் 15 முதல் ஜூலை 31ம் தேதியுடன் 47 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மீனவர்களும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் மீன்பிடிக்க செல்லலாம்.