​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னை விமானநிலையத்தில் இருந்து 20 விமானங்கள் இன்று புறப்பாடு

Published : May 26, 2020 10:22 AM

சென்னை விமானநிலையத்தில் இருந்து 20 விமானங்கள் இன்று புறப்பாடு

May 26, 2020 10:22 AM

சென்னை விமானநிலையத்தில் இன்று விமானங்கள் புறப்படுவதுடன், 21விமானங்கள் பல்வேறு நகரங்களில் இருந்து வந்து சேர்கின்றன. சென்னையில் இருந்து போர்ட் பிளேர், டெல்லி, பெங்களூரு, மதுரை, கவுகாத்தி, திருச்சி, வாரணாசி, தூத்துக்குடி, விஜயவாடா,புவனேஷ்வர், ஐதராபாத் மற்றும் கோவை ஆகிய நகரங்களுக்கு விமானம் இயக்கப்படுகிறது.

இன்று 63 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதுபற்றிய விவரம் தெரியாது என்றும், விமானநிலையத்திற்கு வந்து ஏமாற்றம் அடைந்ததாகவும் பயணிகள் தெரிவித்தனர்.  முன்னதாக விமானநிலையத்தில் பயணிகள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடைபெற்றது.