​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
புதுச்சேரியில் விற்கப்படும் மதுபானங்களின் விலையை 25 சதவீதம் உயர்த்தி அரசாணை வெளியீடு

Published : May 24, 2020 5:02 PM

புதுச்சேரியில் விற்கப்படும் மதுபானங்களின் விலையை 25 சதவீதம் உயர்த்தி அரசாணை வெளியீடு

May 24, 2020 5:02 PM

புதுச்சேரியில்  மதுபானங்கள் மீது 25 சதவீத சிறப்பு  கலால் வரி (special excise duty) கூடுதலாக விதிக்கப்பட்டுள்ளது.

19ம் தேதி முதல் மதுக்கடைகள் திறக்கப்படுமென முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்தபோதிலும், வரி குறித்த முடிவில்   கருத்து வேறுபாடு இருந்ததால் அரசின் முடிவுக்கு துணைநிலை ஆளுநர் கிரண் பேடி ஒப்புதல் அளிக்கவில்லை.

இதனால் கடைகள் திறக்கப்படாமல் உள்ளன. இந்நிலையில் துணைநிலை ஆளுநர் தனது அனுமதியை நேற்றிரவு அளித்தார்.

இதையடுத்து வெளியிடப்பட்ட அரசாணையில புதுச்சேரி, காரைக்காலில்  மதுபானங்கள் (liquors) மீது 25 சதவீதமும், சாராயத்துக்கு (Arracks-- பட்டை சாராயம்) 20 சதவீதமும் சிறப்பு கொரோனா கலால் வரி விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து கடை திறப்பு தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் எனத் தெரிகிறது.