​​ இங்கிலாந்து வங்கியின் ஆளுநர் பதவிக்கு விண்ணப்பிக்கவில்லை - ரகுராம் ராஜன் விளக்கம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இங்கிலாந்து வங்கியின் ஆளுநர் பதவிக்கு விண்ணப்பிக்கவில்லை - ரகுராம் ராஜன் விளக்கம்

இங்கிலாந்து வங்கியின் ஆளுநர் பதவிக்கு விண்ணப்பிக்கவில்லை - ரகுராம் ராஜன் விளக்கம்

May 17, 2018 10:29 PM

இங்கிலாந்து வங்கியின் ஆளுநர் பதவிக்கு விண்ணப்பிக்கவில்லை என இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.

லண்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், அடுத்த ஆண்டு ஜூன் மாதம் காலியாகும் இங்கிலாந்து வங்கி ஆளுநர் பதவிக்கு அவரது பெயர் பரிந்துரைக்கப்பட்டதாக கூறப்படுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த ரகுராம் ராஜன், சிக்காக்கோ பல்கலைக்கழகத்தில் தமக்கு சிறப்பான பணி உள்ளதாகவும், அதுவே மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தமக்கு கல்வி போதிப்பதே மகிழ்ச்சி என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார். மேலும் தான் இங்கிலாந்து வங்கியின் ஆளுநர் பதவிக்கு விண்ணப்பிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.