​​ நாட்டிலேயே தூய்மையான நகரங்களாக இந்தூர், போபால், சண்டிகர் நகரங்கள் தேர்வு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நாட்டிலேயே தூய்மையான நகரங்களாக இந்தூர், போபால், சண்டிகர் நகரங்கள் தேர்வு

நாட்டிலேயே தூய்மையான நகரங்களாக இந்தூர், போபால், சண்டிகர் நகரங்கள் தேர்வு

May 16, 2018 10:08 PM

நாட்டிலேயே தூய்மையான நகரங்களாக இந்தூர், போபால், சண்டிகர் நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தூய்மையான நகரங்களின் பட்டியலை வெளியிட்டார். அதில், இந்தூர் மற்றும் போபால் நகரங்கள் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக முதலிடத்தில் உள்ளன. இதில் சண்டிகரும் தற்போது இடம்பெற்றுள்ளது. 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட பெரிய நகரங்களில் ஆந்திராவின் விஜயவாடா நகரம் தூய்மையானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தூய்மையான மாநில தலைநகர் என்ற சிறப்பை மும்பை தட்டிச் சென்றது. 3 லட்சம் முதல் 10 லட்சம் மக்கள் தொகை கொண்டவற்றில் மைசூரு நகரம் தூய்மையானதாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. குடிமக்கள் கருத்து, நேரடியாக இடத்தை பார்வையிடுதல் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தூய்மையான நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.