​​ வருகை பதிவேட்டில் பெயர் வாசிக்கும் போது பள்ளி மாணவர்கள் ஜெய்கிந்த் கூற வேண்டும்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வருகை பதிவேட்டில் பெயர் வாசிக்கும் போது பள்ளி மாணவர்கள் ஜெய்கிந்த் கூற வேண்டும்

வருகை பதிவேட்டில் பெயர் வாசிக்கும் போது பள்ளி மாணவர்கள் ஜெய்கிந்த் கூற வேண்டும்

May 16, 2018 10:02 PM

மத்திய பிரதேச மாநிலத்தில் வருகை பதிவேட்டின் போது  பள்ளி மாணவர்கள் கட்டாயம் ஜெய்கிந்த் கூற வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.

பா.ஜ.க ஆளும் அந்த மாநில அரசு இதுகுறித்து விடுத்துள்ள சுற்றறிக்கையில், பள்ளிகளில் வருகை பதிவேட்டை வாசிக்கும் போது, வருகை தந்துள்ள மாணவர்கள் கட்டாயம் ஜெய்கிந்த் என்ற வார்த்தையை உரக்க உச்சரிக்க வேண்டுமென கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 1-ஆம் தேதி அன்று சோதனை முயற்சியாக சட்னா மாவட்டத்தில் இந்த முறை அமலுக்கு வந்த தாகவும், திட்டம் முழு வெற்றி அடைந்துள்ளதாகவும் அரசு குறிப்பிட்டுள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் இந்த நடைமுறை விரிவு படுத்தப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் மாணவர்களின் தேசபக்தி வளரும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.