​​ மதுரை கமாராஜர் பல்கலை.யில் 36 பேரிடம் சிபிசிஐடி போலீஸ் விசாரணை
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மதுரை கமாராஜர் பல்கலை.யில் 36 பேரிடம் சிபிசிஐடி போலீஸ் விசாரணை

மதுரை கமாராஜர் பல்கலை.யில் 36 பேரிடம் சிபிசிஐடி போலீஸ் விசாரணை

May 16, 2018 9:54 PM

மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில், பேராசிரியர்கள் உள்ளிட்ட 36 பேரிடம், சிபிசிஐடி போலீசார் 6 மணி நேரம் விசாரணை நடத்தினர்..

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியர் நிர்மலா தேவி விவாகரம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரிக்கின்றனர். இந்த வகையில், மதுரை பல்கலைகழகத்திற்கு வந்த 6 பேர் கொண்ட சிபிசிஐடி குழுவினர், பேராசிரியர்கள், துறை தலைவர்கள், உதவி பேராசிரியர்கள் என 36 பேரிடம் விசாரணை மேற்கொண்டனர்.இதற்கிடையே, பேராசிரியர் நிர்மலா தேவி மீதான வழக்கை, சிபிஐ விசாரணைக்கு மாற்ற கோரி தாக்க செய்யப்பட்ட பொதுநல மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. நிலுவையில் உள்ள சிறப்பு புலனாய்வு குழு விசாரணை கோரும் மனுவோடு இணைந்துகொள்ளுமாறும், மனுதாரருக்கு உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.