​​ மோசடி வழக்கில் சிக்கி உள்ள ஜெய்பிரகாஷ் அசோசியேட் நிறுவனம் ரூ 1000 கோடி கட்ட உச்சநீதிமன்றம் உத்தரவு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மோசடி வழக்கில் சிக்கி உள்ள ஜெய்பிரகாஷ் அசோசியேட் நிறுவனம் ரூ 1000 கோடி கட்ட உச்சநீதிமன்றம் உத்தரவு

மோசடி வழக்கில் சிக்கி உள்ள ஜெய்பிரகாஷ் அசோசியேட் நிறுவனம் ரூ 1000 கோடி கட்ட உச்சநீதிமன்றம் உத்தரவு

May 16, 2018 9:18 PM

மோசடி வழக்கில் சிக்கி உள்ள ஜெய்பிரகாஷ் அசோசியேட் நிறுவனத்தை 1000 கோடி ரூபாய் டெபாசிட் செய்யுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லியை அடுத்த நொய்டாவில் 35000 வீடுகள் கட்டித் தருவராக கூறிய பொதுமக்களிடம் இருந்து 2500 கோடி ரூபாய் வசூலித்துள்ள அந்த நிறுவனம் உறுதி அளித்தபடி வீடுகளை தரவில்லை என்பது புகார். இதன் பேரில் தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்து வரும் உச்சநீதிமன்றம், ஜூன் மாதம் 15-ஆம் தேதிக்குள் 1000 கோடி ரூபாயை ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் நிறுவனம் டெபாசிட் செய்ய வேண்டுமென உத்தரவிட்டுள்ளது. டெபாசிட் செய்யாவிட்டால் அந்த நிறுவனத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஏற்கனவே 2000 கோடி ரூபாயை டெபாசிட் செய்யுமாறு உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அடுத்து ஜெய்பிரகாஷ் அசோசியேட் நிறுவனம் 750 கோடி ரூபாயை மட்டுமே கட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.