​​ ரவுடி கும்பல் வெட்டியதில் பெண் படுகாயம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ரவுடி கும்பல் வெட்டியதில் பெண் படுகாயம்

ரவுடி கும்பல் வெட்டியதில் பெண் படுகாயம்

May 16, 2018 6:53 PM

சென்னையில் ரவுடிகும்பல் வெட்டியதில் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். பிரபல ரவுடி கொலைக்கு பழிதீர்க்கும் விதமாக கொலை முயற்சி நடைபெற்றதாக கூறப்படுகிறது. 

வேளச்சேரி அம்பேத்கர்நகரைச் சேர்ந்த கவிதா என்பவரை ரவுடி ராபின் தனது கூட்டாளிகள் ஏழு பேருடன் சேர்ந்து வீடு புகுந்து வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த கவிதா ஆபத்தான நிலையில் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். பழிக்குப்பழியாக கவிதா தாக்கப்பட்டது போலீஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த 2014ம் ஆண்டு கவிதாவின் கணவரும் அ.தி.மு.க. வட்டச் செயலாளருமான ஏழுமலை வெட்டிக் கொல்லப்பட்டார். சொத்துத் தகராறில் ஏழுமலையை உறவினர்களே கூலிப்படை அமைத்து கொலை செய்ததாக கூறப்பட்டது. 

கூலிப்படையின் தலைவனாக செயல்பட்ட பிரபல ரவுடி டி.வி.செந்திலை பழிக்குப்பழி வாங்க முடிவு செய்த கவிதா 2015ம் ஆண்டில் 10 லட்ச ரூபாய் கொடுத்து கூலிப்படை அமைத்து செந்திலை வெட்டிக் கொன்றதாக கைதானார். இந்நிலையில் டி.வி.செந்திலின் வளர்ப்பு மகனான ராபின் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கவிதாவை வெட்டி பழிவாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ராபின் மற்றும் அவனது கூட்டாளிகளை பிடித்து ஆதம்பாக்கம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.