​​ ஆட்சியமைக்க போட்டி போடும் எடியூரப்பா, குமாரசாமி, காங்கிரஸ் MLA'க்கள் ரிசர்ட்டில் தங்க வைப்பு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆட்சியமைக்க போட்டி போடும் எடியூரப்பா, குமாரசாமி, காங்கிரஸ் MLA'க்கள் ரிசர்ட்டில் தங்க வைப்பு

ஆட்சியமைக்க போட்டி போடும் எடியூரப்பா, குமாரசாமி, காங்கிரஸ் MLA'க்கள் ரிசர்ட்டில் தங்க வைப்பு

May 16, 2018 6:30 PM

எடியூரப்பா ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், மதசார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமியும், எம்எல்ஏக்கள் ஆதரவு கடிதத்தை ஆளுநரிடம் அளித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியிருக்கிறார். 

பெங்களூரில் நட்சத்திர ஹோட்டலில் மதச்சார்பற்ற ஜனதா தள எம்எல்ஏ.க்களின் கூட்டம் குமாரசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் சட்டமன்ற குழு தலைவராக குமாரசாமி தேர்வு செய்யப்பட்டார். இந்த கூட்டத்தில் ராஜா வேங்கடப்பா நாயக்கா (Raja Venkatappa Nayaka), வெங்கட்ட ராவ் நடகவுடா (Venkata Rao Nadagouda) ஆகிய இரு எம்எல்ஏ.க்கள் பங்கேற்கவில்லை. 

எம்எல்ஏ.க்கள் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய குமாரசாமி, எந்த விலை கொடுத்தாவது ஆட்சியைக் கைப்பற்றிவிட வேண்டும் என்ற அவசரத்தில் பாஜக செயல்படுவதாக சாடினார்.  மதச்சார்பற்ற ஜனதா தள எம்எல்ஏ.க்களுக்கு அமைச்சர் பதவி தருவதாக ஆசை காட்டப்படுவதாகவும், 100 கோடி ரூபாய் வரை பேரம் பேசப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். தங்களிடமிருந்து ஒரு எம்எல்ஏ-வை பாஜக இழுத்தால், அதே வேலையை தாங்களும் செய்து பாஜக-விடமிருந்து 2 எம்எல்ஏ.க்களை இழுப்போம் என எச்சரித்தார்.  

இதனைத் தொடர்ந்து ஆளுநர் வஜுபாய் வாலாவை காங்கிரஸ் மாநில தலைவர் பரமேஷ்வரா மற்றும் 10 எம்எல்ஏக்களுடன் சென்று குமாரசாமி சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 118 எம்.எல்.ஏக்களின் ஆதரவு அடங்கிய கடிதம் ஆளுநரிடம் அளிக்கப்பட்டதாக கூறினார். சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து அரசியல் சட்டப்படி முடிவு எடுக்க உள்ளதாக ஆளுநர் உறுதி அளித்ததாக குமாரசாமி தெரிவித்தார்.

இதனிடையே குதிரை பேரத்திற்கு விலை போவதை தடுக்க, காங்கிரஸ் கட்சி தனது எம்எல்ஏக்களை பிடதியில் உள்ள ஈகிள்டன் ரிசார்டில் தங்க வைக்கிறது. ஆளுநர் மாளிகையில் இருந்து பேருந்து மூலம் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ரிசார்டிற்கு அழைத்து செல்லப்பட்டனர். 

image

image

image

image

image

image

image