​​ மருத்துவக் கலந்தாய்வு தேதி ஜூன் 3 ஆவது வாரம் அறிவிக்கப்படும் - அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மருத்துவக் கலந்தாய்வு தேதி ஜூன் 3 ஆவது வாரம் அறிவிக்கப்படும் - அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

மருத்துவக் கலந்தாய்வு தேதி ஜூன் 3 ஆவது வாரம் அறிவிக்கப்படும் - அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

May 16, 2018 5:51 PM

மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு தேதி ஜூன் மூன்றாவது வாரத்தில் அறிவிக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை எழும்பூரில் நடைபெற்ற டெங்கு விழிப்புணர்வு தின நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், மருத்துவர்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த கையேடுகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கடந்த ஆண்டு டெங்கு காய்ச்சல் பரவுவது தீவிர நடவடிக்கை மூலமாக கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாகவும், இந்த ஆண்டு அதனை முன்கூட்டியே தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.