​​ ஜனநாயக உரிமைகளை வலியுறுத்தி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஜனநாயக உரிமைகளை வலியுறுத்தி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ஜனநாயக உரிமைகளை வலியுறுத்தி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

May 16, 2018 3:40 PM

ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கக் கோரி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பல்வேறு கட்சிகளின் கூட்டமைப்பினர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், தி.மு.க. சார்பில் வி.பி.துரைசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

காவிரி பிரச்சனையில் தமிழக நலன் புறக்கணிக்கப்படுவதாகவும், நீட் தேர்வு திணிக்கப்படுவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் குற்றம் சாட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ம.திமு.க. பொதுச் செயலாளர் வைகோ, பத்திரிகையாளர்களை அவதூறாக விமர்சித்த குற்றச்சாட்டில் ஜாமின் மறுக்கப்பட்ட எஸ்.வி.சேகரை இன்னமும் கைது செய்யாதிருப்பதாக விமர்சித்தார்.