​​ மலேசிய முன்னாள் துணை பிரதமர் அன்வர் இப்ராஹீம், பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மலேசிய முன்னாள் துணை பிரதமர் அன்வர் இப்ராஹீம், பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை

மலேசிய முன்னாள் துணை பிரதமர் அன்வர் இப்ராஹீம், பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை

May 16, 2018 7:42 PM

ஓரினச்சேர்க்கை மற்றும் முறைகேடு புகாரில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டிருந்த மலேசியாவின் முன்னாள் துணை பிரதமர் அன்வர் இப்ராஹிம், பொது மன்னிப்பின் அடிப்படையில், சிறையிலிருந்து விடுதலையானார்.

மலேசியாவின் அரசியல் உள்நோக்கத்துடன் கைது செய்யப்பட்டு, 2015ஆம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்ட அன்வர் இப்ராஹிமை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என புதிய பிரதமராக பதவியேற்றுள்ள மகாதீர் முகமது, தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தார்.

இதன் அடிப்படையில், தனது கூட்டணி தலைவர்களுடன், மலேசிய மன்னர் சுல்தான் முகமதுவை நேற்று சந்தித்த மலேசிய பிரதமர் மகாதீர் முகமது, சிறையில் உள்ள அன்வர் இப்ராஹிமுக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு கோரிக்கை விடுத்தார்.

இதனை ஏற்ற மலேசிய மன்னர் அன்வருக்கு பொதுமன்னிப்பு வழங்கினார்.  இதனைத் தொடர்ந்து, அன்வர் இப்ராஹீம், சிறையிலிருந்து இன்று விடுவிக்கப்பட்டார். சிறையிலிருந்து  வெளிவந்த அன்வர் இப்ராஹீமுக்கு, அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்து மகிழ்ந்தனர்.