​​ மாரடைப்பு காரணமாக மேகன் மார்க்கல் தந்தை மருத்துவமனையில் அனுமதி
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மாரடைப்பு காரணமாக மேகன் மார்க்கல் தந்தை மருத்துவமனையில் அனுமதி

மாரடைப்பு காரணமாக மேகன் மார்க்கல் தந்தை மருத்துவமனையில் அனுமதி

May 16, 2018 7:40 PM

இங்கிலாந்து இளவரசர் ஹாரி, அமெரிக்க நடிகை மேகன் மார்க்கலின் திருமணத்தில் மார்க்கலின் தந்தை பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவர்களது திருமணம் வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

இந்நிலையில் மேகன் மார்க்கலின் தந்தையான மெக்சிகோவில் வசிக்கும் தாமஸ் மார்க்கலுக்கு கடந்த வாரம் மாரடைப்பு ஏற்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வரும் அவருக்கு இன்று அறுவை சிகிச்சை நடைபெறுகிறது. இதனால் அவரால் மகளுக்கு இளவரசருடன் நடைபெறும் திருமணத்தில் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.