​​ குளிர்பதனப் பெட்டியிலிருந்து மின்சாரம் தாக்கியதில் 2 வயது ஆண் குழந்தை உயிரழப்பு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
குளிர்பதனப் பெட்டியிலிருந்து மின்சாரம் தாக்கியதில் 2 வயது ஆண் குழந்தை உயிரழப்பு

குளிர்பதனப் பெட்டியிலிருந்து மின்சாரம் தாக்கியதில் 2 வயது ஆண் குழந்தை உயிரழப்பு

May 16, 2018 2:13 PM

சென்னை மேடவாக்கம் அருகே, குளிர்பதனப் பெட்டியிலிருந்து மின்சாரம் தாக்கியதில் 2 வயது ஆண் குழந்தை உயிரிழந்தது. குழந்தை பராமரிப்பில் முறையான அக்கறையின்றி செயல்படுவது விபரீத விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை இது போன்ற சம்பவங்கள் உணர்த்துகின்றன. 

சென்னை சித்தாலப்பாக்கத்தில் ராஜேந்திரன் என்பவரது 2 வயது குழந்தையான பிரதீஷ், வீட்டின் குளிர்பதனப் பெட்டியில் சேதமடைந்த வயரைப் பிடித்ததில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தான். கடந்த ஒருசில மாதங்களில்  சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் இது போன்ற எதிர்பாராத விபத்துக்களால் மேலும் சில குழந்தைகள் உயிரிழந்துள்ளன. 

கடந்த 9ம் தேதி ஆவடி காமராஜ் நகரில் உள்ள ஒரு வீட்டில் கால்கள் பழுதடைந்த மர பீரோ சாய்ந்து விழுந்ததில் நான்கரை வயது குழந்தை உயிரிழந்தது. மார்ச் 27ம் தேதி மதுரவாயல் ஜெயலட்சுமி நகரைச் சேர்ந்த பவானி தொட்டிலில் படுத்திருந்த தனது குழந்தையை உறங்கச் செய்வதற்காக தொட்டிலை ஆட்டினார். குறுகலான இடத்தில் தொட்டில் கட்டப்பட்டிருந்த நிலையில் சுவரின் மீது குழந்தையின் தலைமோதியதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. மார்ச் 14ம் தேதி சென்னை மேற்கு மாம்பலத்தில் மகேஸ்வரி என்பவர் குழந்தையை பால்கனி சுவற்றில் அமர வைத்துக் கொண்டு துணியை காயப்போட்டார். அலட்சியமாக இருந்ததில் பிடி நழுவி மாடியிலிருந்து விழுந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. 

எதைப் பார்த்தாலும் ஆர்வமடையும் வயதில் உள்ள குழந்தைகளுக்கு நேரும் ஆபத்தை தடுப்பது பெற்றோரின் கடமை.  குழந்தைகளுக்கான பாதுகாப்பான சூழல் குறித்து பெற்றோரிடத்தில் போதுமான விழிப்புணர்வு இல்லாததையே இது போன்ற சம்பவங்கள் காட்டுகின்றன. 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் உள்ள வீடுகளில் பல்வேறு பாதுகாப்பு வழிமுறைகள் பரிந்துரைக்கப்படுகின்றன. 

குழந்தைகள் எளிதில் அணுகும் விதமான மின்சார வயர்கள் பிளக்குகள் உள்ளிட்டவற்றை அகற்ற வேண்டியது அவசியமாகும். எடை மிகுந்த பீரோ, மேசை போன்றவை எளிதில் சாயும் விதத்தில் இருந்தால் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். குழந்தைகளுக்கான தொட்டிலை சுற்றிலும் போதுமான இடைவெளி இருப்பதை உறுதி செய்ய வேண்டும். உயரமான இடங்களில் குழந்தைகளை பாதுகாப்பாக கையாள வேண்டும். மாடிப்படிகளில் குழந்தைகள் ஏறாதவாறு தடுப்புகளை அமைக்க வேண்டும். குழந்தைகளின் கைக்கு எட்டும் உயரத்திலான மேசைகளில் எடை மிகுந்த பொருட்களை வைக்கக் கூடாது.

ஆசிட், சுத்திகரிப்பு திரவங்கள் வைத்திருக்கும் அலமாரிகளை பூட்டி வைக்க வேண்டும். குளியலறைகளை குழந்தைகள் எளிதில் அணுகும் விதத்தில் அமைக்கக் கூடாது. குளியலறையில் சூடேற்றப்பட்ட தண்ணீர் அதிக வெப்பநிலையில் வெளியேறாதவாறு பாதுகாக்க வேண்டும். தண்ணீர் சேகரித்து வைக்கப்படும் கொள்கலன்களை குழந்தைகள் எளிதில் அணுகுமாறு வைக்கக் கூடாது. இது தவிரவும் வீட்டின் சுற்றுப்புறத்தை கண்காணித்து குழந்தைகளுக்கு ஆபத்தில்லா சூழலை ஏற்படுத்தித்தருவது பெற்றோரின் கடமை.

கவனக்குறைவால் குழந்தைகள் உயிரிழப்பு

பழுதடைந்த மர பீரோ சாய்ந்து விழுந்ததில் நான்கரை வயது குழந்தை உயிரிழப்பு

தொட்டிலை வேகமாக ஆட்டியதில் சுவரில் தலைமோதி குழந்தை உயிரிழப்பு

பால்கனி சுவற்றில் குழந்தையை அமர வைத்துக் கொண்டு துணி காயப்போட்ட தாய்

பிடி நழுவி மாடியிலிருந்து விழுந்த குழந்தை உயிரிழப்பு

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

குழந்தைகள் அணுகும் விதமான மின்சார வயர்கள் பிளக்குகள் உள்ளிட்டவற்றை அகற்ற வேண்டும்

எடை மிகுந்த பீரோ, மேசை சாயும் விதத்தில் இருந்தால் அப்புறப்படுத்த வேண்டும்

தொட்டிலைச் சுற்றிலும் போதுமான இடைவெளி இருப்பதை உறுதி செய்ய வேண்டும்

உயரமான இடங்களில் குழந்தைகளை பாதுகாப்பாக கையாள வேண்டும்

மாடிப்படிகளில் குழந்தைகள் ஏறாதவாறு தடுப்புகளை அமைக்க வேண்டும்

குழந்தைகளுக்கு எட்டும் உயரத்தில் எடை மிகுந்த பொருட்களை வைக்கக் கூடாது

ஆசிட், சுத்திகரிப்பு திரவங்கள் இருக்கும் அலமாரிகளை பூட்டி வைக்க வேண்டும்

குளியலறைகளை குழந்தைகள் எளிதில் அணுகும் விதத்தில் அமைக்கக் கூடாது

ஹீட்டரிலிருந்து வரும் தண்ணீர் அதிக வெப்பநிலையில் இருக்கக் கூடாது

தண்ணீர் கொள்கலன்களை குழந்தைகள் எளிதில் அணுகுமாறு வைக்கக் கூடாது

சுற்றுப்புறத்தை கண்காணித்து ஆபத்தில்லா சூழலை ஏற்படுத்துவது பெற்றோரின் கடமை