​​ சீன நிறுவனத்தின் மீது அமெரிக்க அதிபருக்கு திடீர் கரிசனம் ஏன்?
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சீன நிறுவனத்தின் மீது அமெரிக்க அதிபருக்கு திடீர் கரிசனம் ஏன்?

சீன நிறுவனத்தின் மீது அமெரிக்க அதிபருக்கு திடீர் கரிசனம் ஏன்?

May 16, 2018 7:00 PM

சீனாவின் பிரபல தொலைத்தொடர்பு நிறுவனமான ZTEக்கு, அமெரிக்க அதிபர் டிரம்ப், திடீரென காட்டிய கரிசனத்திற்கு பின்னணியில், பரஸ்பர பிரதியுபகாரம் இருப்பதாக, தகவல் வெளியாகியிருக்கிறது. ஒரு செய்திக்கு பின்னணியில் மறைந்திருக்கும் தகவல்களை கண்டறிந்து அம்பலப்படுத்தும் அமெரிக்காவின் இணையதள செய்தி நிறுவனமான VOX, டிரம்ப் நடவடிக்கை குறித்த இந்த தகவலை வெளியிட்டிருக்கிறது.

சீனாவின் ZTE தொலைத்தொடர்பு நிறுவனத்திற்கு தேவையான தொழில்நுட்ப உபகரணங்களை இறக்குமதி செய்ய அமெரிக்கா 7 ஆண்டுகளுக்கு தடை விதித்தது. இந்த தடையை நீக்க, கடந்த இரு தினங்களுக்கு முன்பு, அமெரிக்க அதிபர் டிரம்ப் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

அமெரிக்க அதிபரின் திடீர் கரிசனம் குறித்து விசாரித்த, இணையதள செய்தி நிறுவனமான VOX, இந்தோனேசியாவில் டிரம்ப்-ன் குடும்ப நிறுவனம் மேற்கொள்ளும் திட்டம் ஒன்றிற்கு, இந்திய மதிப்பில், 3 ஆயிரத்து 400 கோடி ரூபாயை, சீனா கடனாக கொடுத்திருப்பதே காரணம் என தெரிவித்திருக்கிறது. இதற்கு பிரதிபலனாகவே, சீனாவின் ZTE நிறுவனத்திற்கான தடையை விலக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் நடவடிக்கை எடுத்ததாகவும் VOX கூறியிருக்கிறது.