​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
முகவரி கேட்பது போல் நடித்து வீடு புகுந்து திருட்டில் ஈடுபட்டதுடன் உரிமையாளரிடம் நன்றி சொன்ன கொள்ளையன்

Published : May 16, 2018 11:27 AM

முகவரி கேட்பது போல் நடித்து வீடு புகுந்து திருட்டில் ஈடுபட்டதுடன் உரிமையாளரிடம் நன்றி சொன்ன கொள்ளையன்

May 16, 2018 11:27 AM

சென்னையில், முகவரி கேட்பது போல் வீடு புகுந்து திருட்டில் ஈடுபட்டதுடன், வீட்டில் இருந்த உரிமையாளரிடமே கொள்ளையன் நன்றி தெரிவித்து சென்ற நூதன சம்பவம் நடந்தேறியுள்ளது. 

சைதாப்பேட்டையில் உள்ள ஒரு வீட்டில் கீழ்தளத்திலும், முதல் தளத்திலும் முகமது ஆசன் என்பவர் குடும்பத்துடன் வசிக்கிறார். செவ்வாய்க்கிழமை வீட்டிற்கு வந்த ஒரு இளைஞர், இந்த முகவரியில் நண்பர் வசிப்பதாக ஆசன் மனைவியிடம் கூறியுள்ளார்.

image

முகமது ஆசன் கடைக்கு சென்ற விவரம் தெரியாமல் மேல் தளத்தில் உள்ள தனது கணவரிடம் கேட்குமாறு கூறியுள்ளார். அங்கு கணவர் ஆசன் இருப்பதாக கருதி, இளைஞரை அந்தப் பெண் கண்டுகொள்ளவில்லை.

சிறுதுநேரம் கழித்து கீழே வந்த அந்த இளைஞர், நண்பரை சந்தித்து விட்டதாக அவரிடம் நன்றி தெரிவித்து சென்றுள்ளார். சந்தேகமடைந்த அவர் முதல் தளத்திற்கு சென்றபோது, பீரோவில் இருந்த 15 சவரன் நகை கொள்ளை போனது அறிந்து அதிர்ச்சியடைந்ததார். கணவர் வெளியே சென்றதை கவனிக்காமல், மனைவி அஜாக்கிரதையாக இருந்ததை கொள்ளையன் சாமர்த்தியமாக பயன்படுத்தியது பின்னர் தெரியவந்தது.

புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகள் மூலம் சைதாப்பேட்டை போலீசார் கொள்ளையனை தேடி வருகின்றனர்.