​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கொரோனாவால் மிகப்பெரிய பொருளாதார மந்தநிலை ஏற்படும் -IMF

Published : Apr 09, 2020 7:39 PM

கொரோனாவால் மிகப்பெரிய பொருளாதார மந்தநிலை ஏற்படும் -IMF

Apr 09, 2020 7:39 PM

கொரோனாவால் கற்பனைக்கு எட்டாத வகையில் மிகப்பெரிய பொருளாதார மந்தநிலை ஏற்படும் என சர்வதேச நிதியமான IMF ன் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டாலினா ஜார்ஜீவா எச்சரித்துள்ளார்.

1930 ல் நிகழ்ந்த மிகவும் மோசமான பொருளாதார மந்த நிலையை விடவும் இது தீவிரமாக இருக்கும் என தெரிவித்துள்ள அவர், நிலைமையை சமாளிக்கவும், நீண்டகால பொருளாதார பாதிப்பை தவிர்க்கவும் உலக நாடுகள் கூடுதல் நிதியை ஒதுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

சர்வதேச நிதியத்தின் 180 உறுப்பினர் நாடுகளில் 170 நாடுகள், கொரோனாவால் தனிநபர் வருமானம் குறைந்துவிட்டது என தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ள அவர், 2020 ல் சர்வதேச பொருளாதார வளர்ச்சி பாதாளத்தை நோக்கி செல்லும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.