​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 834 ஆக உயர்வு

Published : Apr 09, 2020 6:10 PM

கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 834 ஆக உயர்வு

Apr 09, 2020 6:10 PM

தமிழகம் முழுவதும் ஒரே நாளில் மேலும் 96 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 834 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அதன் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் மேலும் 96 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆனதால், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 834 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் அதிகபட்சமாக ஈரோடு மாவட்டத்தில் 26 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நெல்லை மாவட்டத்தில் 16 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. நாமக்கல் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் தலா எட்டு பேரும், சென்னையில் 7 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி, திருப்பத்தூர், வேலூரில் 5 பேரும், செங்கல்பட்டு மற்றும் திருப்பூரில் 4 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. மதுரை, தேனி, சேலம், திருவாரூர், நாகை, சிவகங்கை, தென்காசி, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது.