​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
டெல்லியில் முகக்கவசம் அணிவது கட்டாயம்

Published : Apr 09, 2020 11:20 AM

டெல்லியில் முகக்கவசம் அணிவது கட்டாயம்

Apr 09, 2020 11:20 AM

டெல்லியில் அதிகம் கொரோனா பாதிப்புக்குள்ளான இருபது பகுதிகள் மூடப்பட்டுள்ளதுடன், வீட்டைவிட்டு வெளியே வருவோர் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் மகாராஷ்டிரம், தமிழ்நாட்டுக்கு அடுத்தபடியாக மூன்றாவதாக டெல்லி உள்ளது. டெல்லியில் அதிகம் பாதிப்புக்குள்ளான மர்க்காஸ் மசூதி, நிசாமுதீன் பஸ்தி, சாதர் பசார், ஷாஜகானாபாத், மயூர்விகார், பிரதாப்கஞ்ச் உட்பட 20 பகுதிகள் மூடப்பட்டுள்ளன.

அங்கிருந்து ஆட்கள் வெளியே செல்லவும், வெளியாட்கள் உள்ளே செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே டெல்லியில் இன்றியமையாப் பொருட்கள் வாங்க வீட்டைவிட்டு வெளியே வருவோர் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.