​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஸ்பெயின் செஞ்சிலுவை சங்கத்துக்கு உதவ ஜெர்சியை ஏலம் விடுகிறார் நடால்

Published : Apr 09, 2020 11:13 AM

ஸ்பெயின் செஞ்சிலுவை சங்கத்துக்கு உதவ ஜெர்சியை ஏலம் விடுகிறார் நடால்

Apr 09, 2020 11:13 AM

கொரோனா தடுப்பு தொடர்பான பணியில் ஈடுபட்டுள்ள ஸ்பெயின் செஞ்சிலுவை சங்கத்துக்கு உதவ பிரபல டென்னிஸ் வீரர் ரபேல் நடால் தனது ஜெர்ஸியை ஏலத்தில் விட்டு நிதி திரட்ட முடிவு செய்துள்ளார்.

ஸ்பெயினில் கொரோனா தடுப்பு தொடர்பான பணிகளில் அந்நாட்டு செஞ்சிலுவை சங்கம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அந்த சங்கத்துக்கு உதவி செய்ய கடந்த 2019ம் ஆண்டில் பிரெஞ்ச் ஒபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் கோப்பையை கைப்பற்றியபோது அணிந்திருந்த ஜெர்சியை ஏலத்தில் விட்டு நிதி திரட்ட ரபேல் நடால் முடிவு செய்துள்ளார்.