​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஊரடங்கை நீட்டிப்பதா? வேண்டாமா? சனிக்கிழமைக்குப் பின் முடிவெடுக்கப்படும் ..!

Published : Apr 08, 2020 1:19 PM

ஊரடங்கை நீட்டிப்பதா? வேண்டாமா? சனிக்கிழமைக்குப் பின் முடிவெடுக்கப்படும் ..!

Apr 08, 2020 1:19 PM

பிரதமர் நரேந்திர மோடி வரும் சனிக்கிழமை மாநில முதலமைச்சர்களுடன் கலந்துரையாடிய பின்னரே ஊரடங்கை நீட்டிப்பதா வேண்டாமா என்பது பற்றி முடிவெடுக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

மகாராஷ்டிரம், தமிழ்நாடு, டெல்லி, தெலங்கானா, கேரள மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. இதனால் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் எனத் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஊரடங்கு முடியுமுன் வரும் சனிக்கிழமை பிரதமர் மோடி, மாநில முதலமைச்சர்களுடன் காணொலி மூலம் கலந்துரையாட உள்ளார். அப்போது,ஊரடங்கைப் படிப்படியாக விலக்குவது குறித்து முதலமைச்சர்களின் ஆலோசனைகளை அவர் கேட்பார் எனக் கூறப்படுகிறது.

ஊரடங்கை நீட்டிப்பதா விலக்குவதா என்பது குறித்து இந்தக் கலந்துரையாடலுக்குப் பின்னரே முடிவெடுக்கப்படும் எனக் கூறப்படுகிறது.