​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
காவல்துறையினருக்குப் பூக்களைத் தூவி வாழ்த்துத் தெரிவித்த பொதுமக்கள்

Published : Apr 08, 2020 10:31 AM

காவல்துறையினருக்குப் பூக்களைத் தூவி வாழ்த்துத் தெரிவித்த பொதுமக்கள்

Apr 08, 2020 10:31 AM

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகச் சாலையில் சென்ற காவல்துறையினரைப் பொதுமக்கள் கைதட்டி வரவேற்றதுடன், பூமாரி பொழிந்து வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.

நாட்டிலேயே கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையில் மகாராஷ்டிர மாநிலம் தான் முதலிடத்தில் உள்ளது.

இந்நிலையில் அந்த மாநிலத்தின் நாக்பூரில் பொதுமக்கள் வீட்டுக்குள் இருக்க வேண்டியதன் தேவையையும், முகக்கவசம் அணிவதன் நன்மையையும் உணர்த்தும் வகையில் காவல்துறையினர் அணிவகுப்பு நடத்தினர்.

அப்போது பொதுமக்கள் கைதட்டிக் காவல்துறையினரை வரவேற்றதுடன் மாடி வீடுகளில் இருந்து காவல்துறையினர் மீது பூக்களைத் தூவி வாழ்த்துத் தெரிவித்தனர்.