​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மகாராஷ்டிர முதலமைச்சரின் பாதுகாவலர்களுக்கு கொரோனா பரிசோதனை

Published : Apr 07, 2020 3:25 PM

மகாராஷ்டிர முதலமைச்சரின் பாதுகாவலர்களுக்கு கொரோனா பரிசோதனை

Apr 07, 2020 3:25 PM

மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரேயின் பாதுகாப்பு பணியாளர்கள் வழக்கமாக செல்லும் டீக்கடைகாரருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து அவர்களில் 170 க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் பாதுகாப்பு பணிக்கு செல்பவர்களும் இவர்களில் உண்டு என்பதால் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். முதலமைச்சரின் வீடான மாதாஸ்ரீ மும்பை கலாநகரில் உள்ளது. இந்த நிலையில் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்தவர்களுக்கும் கொரோனா உறுதியான டீக்கடை காரருக்கும் தொடர்பு உண்டா என விசாரணை நடக்கிறது.

இதனிடையே சமூக விலகியிருத்தலை உறுதி செய்யும் வகையில் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தாமே காரை ஓட்டிக் கொண்டு அலுவலகத்திற்கு சென்று வருகிறார்.