​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
52 மருத்துவ பணியாளர்களுக்கு தொற்று பரவ காரணமான 70 வயது முதியவர்

Published : Apr 07, 2020 12:15 PM

52 மருத்துவ பணியாளர்களுக்கு தொற்று பரவ காரணமான 70 வயது முதியவர்

Apr 07, 2020 12:15 PM

மும்பையிலுள்ள வாக்ஹார்டு மருத்துவமனையில் 52 மருத்துவ பணியாளர்களுக்கு கொரோனா தொற்று பரவுவதற்கு, இதயம் தொடர்பான பிரச்சனைக்காக அனுமதிக்கப்பட்ட 70 வயது முதியவர் தான் காரணம் என தெரிய வந்துள்ளது.

கடந்த மார்ச் 17ம் தேதி எவ்வித கொரோனா அறிகுறிகளும் இன்றி ஐசியு பிரிவில் அனுமதிக்கப்பட்ட முதியவருக்கு, சில நாட்களுக்கு பின்னரே கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதற்குள் அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள், செவிலியர்களுக்கும் பரவியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

அதே சமயம் கொரோனா பாதித்தவர்களை தனித்த வார்டில் வைத்து சிகிச்சை அளிக்கவில்லை என்றும், தங்களுக்கு போதிய பாதுகாப்பு உபகரணங்களையும் வழங்கவில்லை என்றும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மருத்துவமனை நிர்வாகம் மீது குற்றம்சாட்டியுள்ளனர். கொரோனா பாதிப்பால் மூடி சீல்வைக்கப்பட்டுள்ள வாக்ஹார்டு மருத்துவமனை கொரோனா பரவலின் புதிய மையமாக உருவெடுத்துள்ளது.