​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சீனாவில் முதன்முறையாகக் கொரோனாவால் புதிய உயிரிழப்பு இல்லை

Published : Apr 07, 2020 11:12 AM

சீனாவில் முதன்முறையாகக் கொரோனாவால் புதிய உயிரிழப்பு இல்லை

Apr 07, 2020 11:12 AM

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் புதிய உயிரிழப்புக்கள் இல்லை என்றும், புதிதாக நோயுற்றோர் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

சீனாவின் ஊகான் நகரில் முதன்முறையாகக் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இன்றைய நிலவரப்படி சீனாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 81 ஆயிரத்து 740 ஆகும்.

உயிரிழந்தோர் எண்ணிக்கை மூவாயிரத்து 331 ஆகும். கொரோனா பாதிப்பு பட்டியலை ஜனவரி மாதத்தில் இருந்தே சீனா வெளியிட்டு வரும் நிலையில் முதன்முறையாக இப்போது தான் புதிய உயிரிழப்புகள் ஏதும் இல்லை.

அதேபோல் ஒரு நாளில் புதிதாக நோய்த்தொற்று கண்டறியப்பட்டோரின் எண்ணிக்கையும் 32 ஆகக் குறைந்துள்ளது. இவர்கள் அனைவருமே வெளிநாடுகளில் இருந்து சீனாவுக்கு வந்தவர்கள் ஆவர்.