​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சீனாவில் சுற்றுலாத்தலங்களுக்கு அதிகளவில் செல்லும் மக்கள்

Published : Apr 07, 2020 9:39 AM

சீனாவில் சுற்றுலாத்தலங்களுக்கு அதிகளவில் செல்லும் மக்கள்

Apr 07, 2020 9:39 AM

சீனாவில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளால் மக்கள் சுற்றுலாத்தலங்களுக்கு அதிகளவில் செல்கின்றனர்.

இதனால் மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பிருப்பதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். வைரஸ் தொற்றால் கடந்த 3 மாதமாக சீன மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடந்தனர். இந்த நிலையில் வைரஸ் தொற்று கட்டுக்குள் வந்ததால் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு தளர்த்தப்பட்டது.

இதனால் மனதளவில் பாதிக்கப்பட்டிருந்த அம்மக்கள் வாரவிடுமுறை நாட்கள் என்பதால் பல்வேறு சுற்றுலா தலங்களில் நூற்றுக்கணக்கில் குவிந்து வருகின்றனர்.

குறிப்பாக அன்ஹூய் மாகாணத்தில் உள்ள மலைப்பூங்காவை பார்வையிட 20 ஆயிரம் பேருக்கு மேல் மக்கள் குவிந்ததால் நெருக்கடி ஏற்பட்டது. இந்த நிலையில் இதுபோன்று மக்கள் கூடுவது மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட வழிவகுக்கும் என்று சுகாதாரத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.