​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வக்கார்டு மருத்துவமனை ஊழியர்கள் 52 பேருக்கு கொரொனா... மருத்துவமனைக்கு சீல்வைப்பு

Published : Apr 07, 2020 9:25 AM



வக்கார்டு மருத்துவமனை ஊழியர்கள் 52 பேருக்கு கொரொனா... மருத்துவமனைக்கு சீல்வைப்பு

Apr 07, 2020 9:25 AM

மும்பை வக்கார்டு (Wockhardt) மருத்துவமனையின் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட 52 பேருக்கு கொரொனா உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து அந்த மருத்துவமனை தனிமைப்படுத்தப்பட்டு சீல்வைக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவின் ஐந்தாவது பெரிய வணிகரீதியான தனியார் மருத்துவமனையான வக்கார்டு உலகெங்கும் 20 நாடுகளில் கிளைகளைக் கொண்டுள்ளது. இந்த மருத்துவமனையின் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் உள்ளிட்ட 52 பேருக்கு கொரொனா உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து அந்த மருத்துவமனை கொரோனா கட்டுப்பாட்டு மண்டலத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

மேலும் அந்த மருத்துவமனையில் பணியாற்றும் கேரளாவைச் சேர்ந்த 150 செவிலியர்கள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே தாங்கள் கொரோனா அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு பொது வார்டில் எந்த பாதுகாப்புக் கவசங்களுமின்றி சிகிச்சையளிக்க பணிக்கப்பட்டாதாகவும், நோயாளிகள், நோயாளிகளின் உறவினர்கள், பாதிக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்படாத மருத்துவ ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரும் ஒரே கழிவறைகள், ஒரே உணவகம் உள்ளிட்டவற்ற பயன்படுத்தும் நிலை இருந்ததாகவும் செவிலியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இது குறித்து நிர்வாகத்திடம் தெரிவித்த போதும் அவர்கள் மெத்தனமாக நடந்துகொண்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர். ஏற்கனவே அரசுத் துறை அதிகாரிகள் மருத்துவமனையில் ஆய்வுக்கு வந்த போது சில செவிலியர்கள் தாங்கள் கொரோனா பாதிக்கப்பட்டது குறித்து தெரிவித்ததாகவும் அவர்களை மருத்துவமனை அதிகாரிகள் கண்டித்ததாகவும் அவர்கள் கூறினர். இதனிடையே நோயின் தீவிரத் தன்மையைப் பொறுத்து நோயாளிகளை அரசு மற்றும் பிற தனியார் மருத்துவ மனைகளுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.