​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சீனாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 81,000 பேரில் 77,000 பேர் குணமடைந்ததாக அறிவிப்பு

Published : Apr 07, 2020 9:18 AM

சீனாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 81,000 பேரில் 77,000 பேர் குணமடைந்ததாக அறிவிப்பு

Apr 07, 2020 9:18 AM

கொரோனா வைரசின் பிறப்பிடமான சீனாவில் அதனால் பாதிக்கப்பட்ட 81 ஆயிரத்துக்கும் அதிகமானோரில் 77 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணப்படுத்தப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் சீனாவின் வூகான் நகரில் முதன் முதலில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் தான் கண்டறியப்பட்டதாகவும், அப்போது காரணம் புரியாத நிமோனியா என அது அடையாளப்படுத்தப்பட்டதாகவும் அந்நாட்டு தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.

எனினும் அதற்கான மூலத்தை தொடர்ந்து ஆய்வு செய்த நிலையில் கொரோனா வைரஸ் உறுதிப்படுத்தபட்டதாக கூறியுள்ளது. அங்கு இதுவரை 81,708 பாதிக்கப்பட்ட நிலையில் 3,331 பேர் பலியானதாகவும், 77,078 குணமடைந்து அனுப்பப்பட்டதாகவும் 1,299 பேர் மட்டுமே சிகிச்சையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.