​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஊரடங்குக்கு இடையே டேராடூனில் இருந்து டெல்லி கொண்டு செல்லப்பட்ட அமெரிக்கர்கள்

Published : Apr 07, 2020 8:46 AM

ஊரடங்குக்கு இடையே டேராடூனில் இருந்து டெல்லி கொண்டு செல்லப்பட்ட அமெரிக்கர்கள்

Apr 07, 2020 8:46 AM

கொரொனா ஊரடங்குக்கு இடையே உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் இருந்து 96 அமெரிக்கர்கள் ஏர் இந்தியாவின் சிறப்பு விமானம் மூலம் டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

சுற்றுலா உள்ளிட்டவற்றுக்காக வந்த அவர்கள் ஊரடங்கு காரணமாக சிக்கிக் கொண்டனர். இந்நிலையில் அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனைகள் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு சிறப்பு விமானம் மூலம் டெல்லி அனுப்பி வைக்கப்பட்டதாக டேராடூன் ஜாலி கிராண்ட் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மாநிலத்தில் இருந்து இதுவரை சுமார் 700 வெளிநாட்டினர் அந்தந்த நாட்டு தூதரகங்களின் நடவடிக்கைகளின் பேரில் வெளியேற்றப்பட்டதாகவும், இன்னும் 300 முதல் 400 வெளிநாட்டினர் ரிஷிகேஷ், நைனிட்டால் உள்ளிட்ட இடங்களில் இருப்பதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.