​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
144 தடையை மீறி வெளியே சுற்றியவரை அடித்து விரட்டியதற்காக போலீசார் மீது பதில் தாக்குதல்

Published : Apr 06, 2020 4:55 PM

144 தடையை மீறி வெளியே சுற்றியவரை அடித்து விரட்டியதற்காக போலீசார் மீது பதில் தாக்குதல்

Apr 06, 2020 4:55 PM

உத்தரபிரதேச மாநிலம் பரேலி அருகே தடையை மீறி வெளியே சுற்றியவரை அடித்து விரட்டியதற்காக போலீசார் மீது பதில் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

பரேலி அடுத்த இசாட் நகரில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அங்கு 144 தடையை மீறி வெளியே சுற்றி திரிந்தவரை அடித்து விரட்டியுள்ளனர். இதையடுத்து அவருக்கு ஆதரவாக திரண்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் அடங்கிய கும்பல் போலீசாரை சுற்றிவளைத்து தாக்கியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதை அடுத்து அப்பகுதிக்கு விரைந்த கூடுதல் போலீசார், தாக்குதலில் ஈடுபட்ட சிலரை கைது செய்தனர்.