​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழகம், புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

Published : Apr 06, 2020 2:42 PM

தமிழகம், புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

Apr 06, 2020 2:42 PM

தமிழகம், புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்த மையம் விடுத்துள்ள அறிவிப்பில், வெப்ப சலனம் காரணமாக கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், சேலம், கன்னியாகுமரி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் மற்றும் நெல்லை ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், உள்மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்னகள்ளார், வால்பாறை பகுதிகளில் தலா 6 செ.மீ மழை பதிவாகியுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டதுடன் காணப்படும் என்றும், அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 28 டிகிரி செல்சியசும் வெப்பநிலை பதிவாக வாய்ப்புள்ளது.