​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
விளக்கேற்றிய நேரத்தில் துப்பாக்கியால் சுட்ட பாஜக மகளிரணித் தலைவி

Published : Apr 06, 2020 12:54 PM



விளக்கேற்றிய நேரத்தில் துப்பாக்கியால் சுட்ட பாஜக மகளிரணித் தலைவி

Apr 06, 2020 12:54 PM

நாட்டு மக்கள் அனைவரும் விளக்கேற்றிய நேரத்தில் பாஜக மகளிரணித் தலைவி ஒருவர் துப்பாக்கியால் வானை நோக்கிச் சுட்டுள்ளார்.

கொரோனாவுக்கு எதிரான போரில் மக்களின் ஒற்றுமையைக் காட்ட ஞாயிறு இரவு 9 மணிக்கு வீடுகளில் விளக்கேற்றும்படி பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.

இதைத் தவறாகப் புரிந்துகொண்ட உத்தரப்பிரதேசத்தின் பல்ராம்பூர் மாவட்ட பாஜக மகளிரணித் தலைவி மஞ்சு திவாரி கைத்துப்பாக்கியால் வானை நோக்கிச் சுட்டு அந்தக் காட்சியை டுவிட்டரில் பதிவேற்றியுள்ளார்.

இதேபோல் தெலங்கானா பாஜக சட்டமன்ற உறுப்பினர் பெரிய தீப்பந்தத்தை ஏந்திக்கொண்டு ஒரு கூட்டத்துடன் நின்று படம்பிடித்து டுவிட்டரில் பதிவேற்றியுள்ளார்.