​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
144 தடை உத்தரவை மீறியதற்காக தமிழகம் முழுவதும் 90,918 பேர் கைது, 69,589 வாகனங்கள் பறிமுதல்

Published : Apr 06, 2020 12:50 PM

144 தடை உத்தரவை மீறியதற்காக தமிழகம் முழுவதும் 90,918 பேர் கைது, 69,589 வாகனங்கள் பறிமுதல்

Apr 06, 2020 12:50 PM

144 தடை உத்தரவை மீறியதற்காக தமிழகம் முழுவதும் தற்போது வரை 90 ஆயிரத்து 918 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொரோனா பரவலை தடுப்பதற்காக அமல்படுத்தப்பட்டுள்ள 144 தடை உத்தரவை மீறி வெளியே சுற்றித்திரிவோர் மீது வழக்கு பதிவு செய்தும், வாகனங்களை பறிமுதல் செய்தும் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் தமிழகம் முழுவதும் தற்போது வரை 82 ஆயிரத்து 752 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. விதிமீறல்களில் ஈடுபட்ட 69 ஆயிரத்து 589 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், 90 ஆயிரத்து 918 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். விதிமீறல்களில் ஈடுபட்டவர்களிடம் 24 லட்சத்து 60 ஆயிரத்து 194 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.