​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பிரதமரை உலகமே பாராட்டுகிறது - ஜே.பி.நட்டா

Published : Apr 06, 2020 12:36 PM

பிரதமரை உலகமே பாராட்டுகிறது - ஜே.பி.நட்டா

Apr 06, 2020 12:36 PM

நெருக்கடியான இந்த கொரோனா காலகட்டத்தில் பிரதமர் மோடி நாட்டை திறமையாக வழிநடத்துவதை உலக மக்கள் பாராட்டுவதாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

பாஜக துவக்கப்பட்டு 40 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு கட்சித் தொண்டர்களுக்கு நட்டா விடுத்துள்ள செய்தியில் கொரோனாவை உலகில் இருந்து ஒழிப்பதில் மோடி உறுதுணையாக இருப்பார் என ஒட்டு மொத்த உலகமும் நம்பிக்கையுடன் இருப்பதாக அவர் கூறியிருக்கிறார்.

இந்த தருணத்தில், கட்சியின் தொண்டர்கள் தலா 40 பேரை தொடர்பு கொண்டு, பிரதமரின் கொரோனா அவசரகால நிதிக்கு 100 ரூபாய் வீதம் நன்கொடை அளிக்குமாறு கேட்டுக் கொள்ள வேண்டும் எனவும் நட்டா கேட்டுக் கொண்டுள்ளார்.

கொரோனா தடுப்பில் 24 மணி நேரமும் பாடுபட்டு வருபவர்களுக்கு நன்றி தெரிவிப்பதுடன், அதை வெளிக்காட்டும் வகையில் ஒரு நேர உணவை தியாகம் செய்ய வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.