​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஓர் அழைப்பு ! ஒரே தேசம் ! கொரோனாவை விரட்ட ஒளிருகிறது, இந்தியா

Published : Apr 05, 2020 8:52 PM

ஓர் அழைப்பு ! ஒரே தேசம் ! கொரோனாவை விரட்ட ஒளிருகிறது, இந்தியா

Apr 05, 2020 8:52 PM

பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று கொரோனாவிற்கு எதிராக ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் 9 மணியளவில் மின் விளக்குகளை அணைத்து வீட்டின் முன்பு அகல் விளக்குகளையும், தீபங்களையும் ஏற்றினர்.

கோவை துடியலுரில் உள்ள தனியார் மருத்துவமனையின் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் என அனைவரும், தனிமனித இடைவெளியை கடை பிடித்தவாறே மெழுகுவர்த்திகளை ஏந்தியும் செல்போன் பிளாஷ் லைட் அடித்து தங்களது ஒற்றுமையை வெளிப்படுத்தினர். 

சேலத்தில் மக்கள் லேசர் விளக்குகள், தீபங்கள், டார்ச் லைட்டுகள் போன்றவற்றை ஒளிரவைத்து, கொரோனாவை விரட்டும் இந்தியாவின் முயற்சிகு தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர். 

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தனது வீட்டின் மொட்டை மாடியில், கொரோனாவிற்கு எதிரான ஒற்றுமை தீபத்தை கையில் ஏந்தியவாறு நின்றிருந்தார். 

காஞ்சிபுரத்திலும் மக்கள் மின்விளக்குகள் அனைத்தையும் அணைத்துவிட்டு, சாலையிலும், வீட்டின் மொட்டை மாடியில் நின்று டார்ச் லைட் அடித்து ஒற்றுமையை வெளிப்படுத்தினர். 

கன்னியாகுமரியில் மக்கள் மின்விளக்குகளை அனைத்து விட்டு, வீட்டு வாசல் முன்பு குத்து விளக்குகளையும், அகல் விளக்குகளையும் ஏற்றி வைத்தனர். 

நெல்லையில் கார்த்திகை தீபம் போன்றவாறு வீதிகளின் இருபுறமும் அகல் விளக்குகளை ஏற்றி வைத்து மக்கள் தங்களது ஒற்றுமையை வெளிப்படுத்தினர். 

கரூரில் மின்விளக்குகள் முழுவதையும் அனைத்து விட்டு மொட்டை மாடியில் திரண்ட மக்கள், செல்போன் டார்ச் மூலம் ஒளியேற்றினர். 

திருப்பூரில் சாலையின் ஓரம் இடைவெளிவிட்டு நின்றிருந்த மக்கள், டார்ச் லைட்டுகள், அகல் விளக்குகள் மூலம் கொரோனாவிற்கு எதிரான ஒற்றுமை வெளிச்சத்தை ஒளிரவைத்தனர். 

மதுரையில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஒன்று திரண்டு, கொரோனாவிற்கு எதிராக போரடிக்கொண்டிருக்கும் பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஒளியேற்றினர். 

திருச்சியில் அடுக்குமாடி குடியிருப்பு பகுதி மக்கள் மின்விளக்குகளை அனைத்து விட்டு, ஜெய்ஹிந்த் என முழக்கமிட்டவாறு டார்ச் லைட்டுகள் மற்றும் மெழுகுவர்த்திகளை கையில் ஏந்தி நின்றிருந்தனர்.