​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மத்திய அரசு தாக்கல் செய்துள்ள காவிரி நதிநீர் பங்கீடு வரைவுத் திட்டம் குறித்து மூத்த அமைச்சர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை

Published : May 15, 2018 7:39 PM

மத்திய அரசு தாக்கல் செய்துள்ள காவிரி நதிநீர் பங்கீடு வரைவுத் திட்டம் குறித்து மூத்த அமைச்சர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை

May 15, 2018 7:39 PM

உச்சநீதிமன்றத்தில், மத்திய அரசு தாக்கல் செய்துள்ள காவிரி வரைவு செயல்திட்ட அறிக்கை குறித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். 

உச்சநீதிமன்றத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரும் வழக்கு, நேற்று விசாரணைக்கு வந்தபோது, காவிரி வரைவு செயல் திட்ட அறிக்கையை, மத்திய அரசு தாக்கல் செய்தது. அந்த அறிக்கையை, சம்பந்தப்பட்ட 4 மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்க வேண்டும் என்றும், அதில் உள்ள நிறைகுறைகளை மாநிலங்கள் தெரிவிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு, நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ள நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தலைமைச் செயலகத்தில், ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் ஜெயக்குமார், உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

பகல் 12.45 மணிக்குத் தொடங்கிய இந்த ஆலோசனை கூட்டத்தில், காவிரி வரைவு செயல் திட்ட அறிக்கையில், தமிழ்நாட்டிற்கான, சாதக - பாதக அம்சங்கள் குறித்து, விரிவாக ஆலோசனை நடைபெற்று வருகிறது. உச்சநீதிமன்றத்தில், காவிரி வழக்கு நாளை விசாரணைக்கு வரும்போது, தமிழ்நாடு அரசு, தனது கருத்தை தெரிவிக்க உள்ளது.