​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு மேலும் ஒருவர் உயிரிழப்பு

Published : Apr 04, 2020 5:52 PM

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு மேலும் ஒருவர் உயிரிழப்பு

Apr 04, 2020 5:52 PM

தமிழகத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.

மதுரையைச் சேர்ந்த ஒருவரும் விழுப்புரத்தைச் சேர்ந்த ஒருவரும் ஏற்கனவே கொரோனா தொற்றால் உயிரிழந்த நிலையில், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 53 வயது பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மகனுடன் டெல்லி சென்று தேனி திரும்பிய நபருக்கும் அவருடன் தொடர்பில் இருந்த மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் மனைவிக்கு மூச்சு திணறல் அதிகமாகி பிற்பகலில் உயிரிழந்ததாகவும் கணவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.