​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 68 ஆக உயர்வு

Published : Apr 04, 2020 10:54 AM

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 68 ஆக உயர்வு

Apr 04, 2020 10:54 AM

இந்தியாவில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 902-ஆக அதிகரித்துள்ளது. அதேநேரத்தில் மருத்துவ சிகிச்சையில் 184 பேர் இதுவரை  குணமாகியுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா தொற்று நோய் பாதித்தோரின் எண்ணிக்கை நேற்றிரவு 2 ஆயிரத்து 804-ஆக இருந்தது. இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் மேலும் 25 பேருக்கும், கோவாவில் மேலும் ஒருவருக்கும், மத்திய பிரதேச மாநிலம் மொரேனாவில் மேலும் 10 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்களையும் சேர்த்து நாட்டில் புதிதாக 98 பேருக்கு கொரோனா தொற்று நோய் உறுதியானதால், பாதித்தோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 902ஆக உயர்ந்துள்ளது. இதில் வெளிநாட்டினர் 57 பேரும் அடங்குவார்கள்.

கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. அந்த மாநிலத்தில் 423 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கடுத்து 2ஆவது இடத்தில் தமிழ்நாடு உள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 411 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. 3ம் இடத்தில் உள்ள டெல்லியில் 386 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் இதுவரை கொரோனாவுக்கு 68 பேர் பலியாகியுள்ளனர். அவர்களில் மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிகபட்சமாக 19 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கடுத்து அதிகபட்சமாக குஜராத்தில் 9 பேரும், தெலுங்கானாவில் 7 பேரும் கொரோனாவுக்கு உயிரை இழந்துள்ளனர்.

இதுதவிர்த்து, நாடு முழுவதும் மருத்துவ சிகிச்சையில் கொரோனாவில் இருந்து 184 பேர் குணமடைந்துள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 42 பேரும், கேரளாவில் 41 பேரும் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். 

மேலும் அறிய : https://google.com/covid19-map/?hl=en