​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
60 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பலி...

Published : Apr 04, 2020 8:11 AM

60 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பலி...

Apr 04, 2020 8:11 AM

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இதில் வைரஸ் பரவிய சீனாவை விட பல நாடுகளில் இறப்பு விகிதம் அதிகரித்துள்ளது.

கொரோனாவால் பல நாடுகளில் நிமிடத்திற்கு நிமிடமும், ஒரு சில நாடுகளில் நொடிக்கு நொடியும் பலி மற்றும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

இன்றைய காலை நிலவரப்படி, அமெரிக்காவை பொறுத்தவரை, 2 லட்சத்து 76 ஆயிரத்து 965 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆயிரத்து 391 ஆக உயர்ந்துள்ளது. ஸ்பெயினில் ஒரே நாளில் 850 பேர் உயிரிழந்து விட்டதால், பலி எண்ணிக்கை 11 ஆயிரத்து 198 ஆக அதிகரித்துள்ளது.

இத்தாலியில் உயிரிழப்பு 14 ஆயிரத்து 681 ஆகவும், சீனாவில் 3 ஆயிரத்து 322 ஆகவும் உயர்ந்துள்ளது. ஜெர்மனியில் ஆயிரத்து 275 பேரும், பிரான்சில் 6 ஆயிரத்து 507 பேரும் பலியாயினர்.

ஈரானில் உயிரிழப்பு - 3 ஆயிரத்து 294 ஆக உயர்ந்தது இங்கிலாந்தில் ஒரே நாளில் 684 பேர் மரணம் அடைந்ததால், பலி எண்ணிக்கை 3 ஆயிரத்து 605 ஆக அதிகரித்தது.

பெல்ஜியத்தில் ஒரே நாளில் 132 பேர் பலியானதால், உயிரிழப்பு ஆயிரத்து143 ஆகவும், நெதர்லாந்தில் ஒரே நாளில் 148 பேர் கொரோனாவுக்கு மரணம் அடைந்ததால், பலி எண்ணிக்கை ஆயிரத்து 487 ஆகவும் உயர்ந்தது.

கொரோனாவை கண்டு, உலக நாடுகள் எல்லாம் அச்சத்தில் உறைந்திருக்க கிழக்கு ஆசிய நாடான வட கொரியா மட்டும் , எந்த வித பதற்றமும், பரபரப்பும் இல்லாமல் உள்ளது. சீனாவில் கடந்த ஜனவரி மாதம் கொரோனா வைரஸ் தொற்று பரவியதும் தனது எல்லைகளை மூடிய வட கொரியா, அந்நாட்டுடனான அனைத்து வர்த்தக உறவுகளையும் நிறுத்தியது. எனவே, வட கொரியாவை பொறுத்தவரை, ஒரு கொரோனா நோயாளி கூட கிடையாது என அந்நாடு அறிவித்துள்ளது.