​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை சரிவு

Published : Apr 04, 2020 8:07 AM

கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை சரிவு

Apr 04, 2020 8:07 AM

கோயம்பேடு சந்தையில் தேவைக்கு அதிகமாக காய்கனிகள் வரத்து இருப்பதால் விலை குறைந்துள்ளதாக என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஊரடங்கு காரணமாக வெளியூர்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வரத்து குறைவாக இருப்பதாகக் கூறி, காய்கறி விலை கடந்த வாரம் உயர்ந்திருந்தது. இந்நிலையில், காய்கறி வரத்து தற்போது அதிகமாக இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

வழக்கமான நாட்களில் சென்னைக்கு நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் டன் காய்கனிகள் கோயம்பேட்டிற்கு வருவதாக அவர்கள் கூறுகின்றனர். தற்போது ஊரடங்கு காரணமாக பெரு நிறுவனங்கள், மென்பொருள் நிறுவனங்கள், (மாணவ, மாணவிகள் தங்கும் விடுதிகள்) போன்றவை மூடப்பட்டுள்ளதால் நாள் ஒன்றுக்கு 3 ஆயிரம் டன் என்ற அளவே போதுமானதாக இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோயம்பேடு சந்தையில் தனிமனித இடைவெளியை மக்கள் பின்பற்றுவதில்லை என்றும், தொழிலாளர்கள் முக கவசம் அணிவதில்லை எனவும் தகவல் வெளியானதைத் தொடர்ந்து சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் சார்பில் தொழிலாளர்களுக்கு முகக்கவசம் வழங்கப்பட்டது.

சந்தையில் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக மாநில பேரிடர் மீட்புக் குழுவினர், காவல்துறையினர் ஆகியோர் பணியிலமர்த்தப்பட்டுள்ளனர். தொழிலார்களுக்கு சானிடைசர்களும், கபசுரக் குடிநீரும் வழங்கப்பட்டு வருகிறது.