​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக தமிழகத்திற்கு 510 கோடி ரூபாய் ஒதுக்கியது மத்திய அரசு

Published : Apr 04, 2020 7:55 AM

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக தமிழகத்திற்கு 510 கோடி ரூபாய் ஒதுக்கியது மத்திய அரசு

Apr 04, 2020 7:55 AM

கொரோனா தடுப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளுக்காக தமிழகத்திற்கு 510 கோடி ரூபாய் உள்பட 28 மாநிலங்களுக்கு மத்திய அரசு 11 ஆயிரத்து 92 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது.

நோய்த்தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் அதை தடுப்பதற்கான முயற்சிகளில் மத்திய அரசு தீவிரமாக முனைந்துள்ளது. அந்த வகையில், மாநில அரசுகளுக்கு உதவ பேரிடர் அபாய மேலாண்மை நிதியின் கீழ் மத்திய அரசு இந்த நிதியை வழங்கியுள்ளது. இந்த நிதியானது கொரோனா நோய்த்தடுப்பு மையங்களை அமைத்தல்,  கூடுதலாக ஆய்வகங்களை அமைத்தல், மருத்துவ உபகரணங்களை வாங்குதல், அரசு மருத்துவமனைகளின் வசதிகளை மேம்ம்படுத்துதல் உள்ளிட்ட காரணங்களுக்காகப் பயன்படுத்தப்பட உள்ளது.