​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னையில் 81 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி !

Published : Apr 03, 2020 6:34 PM

சென்னையில் 81 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி !

Apr 03, 2020 6:34 PM

தமிழ்நாட்டிலேயே, கொரோனா தொற்றுநோயால் அதிகம் பாதிக்கப்பட்டோரை கொண்ட மாவட்டமாக சென்னை மாறியிருக்கிறது.

சென்னையில் மட்டும், 81 பேர் கொரோனா தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருவதாக, சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மாவட்ட வாரியாக வெளியிடப்பட்டுள்ள பட்டியலில், சென்னைக்கு அடுத்தபடியாக, திண்டுக்கல் மாவட்டத்தில், 43 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் 36 பேரும், ஈரோடு மாவட்டத்தில் 32 பேரும், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 29 பேரும், தேனி மற்றும் நாமக்கல் மாவட்டங்களில், தலா 21 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கரூர் மாவட்டத்தில் 20 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக, சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது.

டெல்லி சென்று வந்த 1200 பேரில், கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு, அதில், 364 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், தமிழ்நாடு சுகாதாரத்துறை கூறியிருக்கிறது.