​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
5 பேர் கொண்ட தமிழ்நாடு நீர்வள மேம்பாட்டுக் குழு என்ற புதிய அமைப்பு

Published : May 15, 2018 5:15 PM

5 பேர் கொண்ட தமிழ்நாடு நீர்வள மேம்பாட்டுக் குழு என்ற புதிய அமைப்பு

May 15, 2018 5:15 PM

5 பேர் கொண்ட தமிழ்நாடு நீர்வள மேம்பாட்டுக் குழு என்ற புதிய அமைப்பு உருவாக்கப் பட்டுள்ளது. அணைகளில் உள்ள நீரின் அளவை கண்காணித்தல், புதிய திட்டங்களை செயல்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை இந்தக் குழு மேற்கொள்ளும். பொதுப்பணித்துறையின் ஓய்வுபெற்ற தலைமைப் பொறியாளர் எஸ்.எஸ்.ராஜகோபால் தலைமையிலான இந்தக் குழுவில், ஓய்வுபெற்ற சிறப்பு தலைமைப்பொறியாளர் ஆர்.இளங்கோவன் துணைத்தலைவராக இருப்பார்.

ஓய்வுபெற்ற நிர்வாகப் பொறியாளர்கள் ராம.பழனியப்பன், பி.வி.சீனிவாசராவ் ஆகியோர் உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் பிறப்பித்த உத்தரவின்பேரில், இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது.