​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கச்சா எண்ணெய் உற்பத்தி விவகாரம் : ரஷ்யா, சவூதி அரேபியா பேச்சுவார்த்தையில் அமெரிக்கா இணையும் - டிரம்ப்

Published : Apr 02, 2020 4:17 PM

கச்சா எண்ணெய் உற்பத்தி விவகாரம் : ரஷ்யா, சவூதி அரேபியா பேச்சுவார்த்தையில் அமெரிக்கா இணையும் - டிரம்ப்

Apr 02, 2020 4:17 PM

கச்சா எண்ணெய் உற்பத்தியை கட்டுப்படுத்தும் விவகாரத்தில் ரஷியாவும், சவூதி அரேபியாவும் நேரடி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், தகுந்த நேரத்தில் இந்த பேச்சுவார்த்தையில் அமெரிக்கா இணையும் என்றும் அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் எரிபொருளுக்கான தேவை குறைந்துள்ளது. அதே சமயம் தேவையை காட்டிலும் கச்சா எண்ணெய் உற்பத்தி அதிகரித்துள்ளதால் அதன் தேக்கம் அதிகரித்துள்ளது.

இதனை சரி செய்யும் விதமாக, சவூதி அரேபியா தலைமையிலான ஒபெக் நாடுகள் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்து கொள்வது குறித்து ரஷியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தின.

ஆனால் அதில் சுமுகமான முடிவு எட்டப்படவில்லை என்பதுடன் கச்சா எண்ணெய் உற்பத்தி விவகாரத்தில்  சவூதி அரேபியா மற்றும் ரஷியா இடையே மோதல் போக்கு தொடர்ந்து நீடிக்கிறது.