​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திமுகவில் இருந்து கே.பி.ராமலிங்கம் சஸ்பென்ட்

Published : Apr 02, 2020 1:11 PM

திமுகவில் இருந்து கே.பி.ராமலிங்கம் சஸ்பென்ட்

Apr 02, 2020 1:11 PM

திமுக விவசாய அணி மாநிலச் செயலாளராக இருந்த கே.பி.ராமலிங்கம், கட்சி அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்ளிட்ட அனைத்து பொறுப்பில் இருந்தும் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார்.

கொரோனா பற்றி விவாதிக்க முதலமைச்சர் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார். ஆனால் முதலமைச்சர் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட அரசியல் தலைவர்கள் வலியுறுத்தக் கூடாது என கே.பி.ராமலிங்கம் கூறியிருந்தார்.

இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், கே.பி.ராமலிங்கம், கட்சிக் கட்டுப்பாட்டை மீறி, கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டு வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

எனவே அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பில் இருந்தும் கே.பி.ராமலிங்கம் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுவதாக மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.