​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மும்பை தாராவியில் அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்தவர் கொரோனாவால் பலி... தனிமைப்படுத்தப்பட்ட 308 வீடுகள்...!

Published : Apr 02, 2020 10:38 AM

மும்பை தாராவியில் அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்தவர் கொரோனாவால் பலி... தனிமைப்படுத்தப்பட்ட 308 வீடுகள்...!

Apr 02, 2020 10:38 AM

மும்பை தாராவியில் அடுக்கு மாடிக் குடியிருப்பைச் சேர்ந்த ஒருவர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்ததை அடுத்து அந்தக் குடியிருப்பு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

தாராவி குடிசை மாற்று வாரியக் குடியிருப்பில் 308 வீடுகளும் 91 கடைகளும் உள்ளன. இந்தக் குடியிருப்பைச் சேர்ந்த 56 வயதான நபர் சளி இருமல் காரணமாக மருத்துவரிடம் சிகிச்சை பெற்றுள்ளார்.

பரிசோதித்ததில் அவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு புதனன்று உயிரிழந்தார். இதையடுத்து அவர் குடும்பத்தினர் 8 பேர் தனிமைக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். மும்பையில் தமிழர்கள் அதிகம்பேர் வாழும் பகுதி தாராவி என்பது குறிப்பிடத் தக்கது.