​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கொரோனா பரவலை தடுக்க.. கிருமி நாசினி தெளிப்பு..!

Published : Apr 02, 2020 9:18 AM

கொரோனா பரவலை தடுக்க.. கிருமி நாசினி தெளிப்பு..!

Apr 02, 2020 9:18 AM

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க சாலைகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுகாதாரத்துறை பணியாளர்கள் சாலைகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

 

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் வீதி வீதியாகச் சென்று கிருமி நாசினியை தெளிக்கும் பணியில் பேரூராட்சி பணியாளர்கள் ஈடுபட்டனர். பேருந்து நிலையம், கூமாபட்டி, வடக்கு மற்றும் கிழக்கு ரதவீதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

 

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள கே.பாப்பாங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் சொந்த செலவில் டிராக்டர் மூலம் கிருமி நாசினியை தெளித்தார்.