​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
1- 8ஆம் வகுப்பு வரை CBSE மாணவர்கள் தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி

Published : Apr 01, 2020 8:08 PM



1- 8ஆம் வகுப்பு வரை CBSE மாணவர்கள் தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி

Apr 01, 2020 8:08 PM

1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான சிபிஎஸ்இ மாணவர்கள் தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. இதனால் பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வுகளை நடத்துவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது.

இந்நிலையில், 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை படிக்கும் சிபிஎஸ்இ மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவதாக மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சியை அந்தந்த பள்ளிகள் முடிவு செய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.