​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வாடிக்கையாளர்கள் நெருங்கி நின்றால் எச்சரிக்கும் ரோபோ

Published : Apr 01, 2020 4:17 PM

வாடிக்கையாளர்கள் நெருங்கி நின்றால் எச்சரிக்கும் ரோபோ

Apr 01, 2020 4:17 PM

ஜெர்மனி நாட்டின் லிண்ட்லர் நகரில் உள்ள பல்பொருள் அங்காடியில், வாடிக்கையாளர்களை 5 முதல் 6 அடி வரை இடைவெளி விட்டு நிற்க சொல்லும் ரோபோ, அனைவரையும் கவர்ந்துள்ளது.

பெப்பர்ஸ் (Peppers) என்றழைக்கப்படும் இந்த ரோபோ, சென்சார்கள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு இடையே உள்ள தூரத்தை கணக்கிட்டு, அவர்கள் நெருங்கி வரும் வேளையில், கனிவான குரலில் தள்ளி நிற்க சொல்லி, சமூக இடைவெளியை கடைபிடிக்க அறிவுறுத்துகிறது.

கொரோனாவால், மன உளைச்சலுக்கு ஆளானவர்களுக்கு, பெப்பர்ஸ் ரோபோவின் குரல், புத்துணர்ச்சி ஊட்டுவதாக தெரிவிக்கின்றனர்.